விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி இன்று அறிவிப்பு

ja1

சென்னை :

தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணியில் தே.மு. தி.க.வுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. இதுவரை 5 கட்டங்களாக 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மீதியுள்ள 11 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அந்த தொகுதி விவரம்:–

கலசப்பாக்கம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், திண்டிவனம், மேட்டூர், உடுமலைப்பேட்டை, ஆத்தூர், ஒரத்த நாடு, மன்னார்குடி. இந்த 11 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார். ரிஷிவந்தியம் அல்லது உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப் படுகிறது.

விஜயகாந்த் 2006 சட்ட மன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் (2011) அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றார்.