விஜயகாந்த் 2-ம் கட்ட பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்

VijayakanthSECVPF1

விஜயகாந்த் 2-ம் கட்ட பிரசாரம் கிருஷ்ணகிரியில் நாளை தொடங்குகிறார்

விஜயகாந்த்

தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2-ம் கட்டமாக நாளை (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 25-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

2-ம் கட்ட பிரசாரம்

இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மாவட்ட வாரியாக தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 2-ம் கட்டமாக தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி-தர்மபுரி

18-ந் தேதி மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனேஸ்வரன் நகர் அருகில் நடைபெறும் கூட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தங்கள் கூட்டணியை சேர்ந்த வேட்பாளர் களை ஆதரித்து பேசுகிறார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தர்மபுரியில் உள்ள வள்ளலார் திடலில் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாலக்கோடு, பெண்ணாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி) தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பேசுகிறார்.

ஏற்காடு-ஓமலூர்

19-ந் தேதி மாலை 4 மணிக்கு ஏற்காடு வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நடைபெறும் கூட்டத்தில் கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (பழங்குடியினர்), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), சேலம் (மேற்கு) தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். மாலை 6 மணிக்கு நடைபெறும் ஓமலூர் பஸ் நிலையம் அருகே பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி, சங்ககிரி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

நாமக்கல்-குளித்தலை

20-ந் தேதி மாலை 4 மணிக்கு நாமக்கல் பஸ் நிலையம் அருகே நடைபெறும் கூட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். மாலை 6 மணிக்கு குளித்தலை சுங்ககேட் அருகே பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு-அந்தியூர்

21-ந் தேதி மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பசத்திரத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, பெருந்துறை வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். மாலை 6 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள தேரடி திடலில் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி), பவானி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

காங்கேயம்-உடுமலைப்பேட்டை

22-ந் தேதி மாலை 4 மணிக்கு காங்கேயம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் கூட்டத்தில் காங்கேயம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), அவினாசி (தனி) தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். மாலை 6 மணிக்கு உடுமலைப்பேட்டை பஸ் நிலையம் அருகே பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் தாராபுரம் (தனி), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

குன்னூர்-வடவள்ளி-சூளூர்

23-ந் தேதி பிற்பகல் 12 மணிக்கு குன்னூர் பஸ் நிலையம் அருகே நடைபெறும் கூட்டத்தில் உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மாலை 4 மணிக்கு கோவை வடவள்ளியில் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் கவுண்டம்பாளையம், கோவை (வடக்கு), கோவை (தெற்கு), தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர்களையும், மாலை 6 மணிக்கு சூளூர் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பிரசார கூட்டத்தில் சூளூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

வேடசந்தூர்-மதுரை

24-ந் தேதி மாலை 4 மணிக்கு வேடசந்தூரில் நடைபெறும் கூட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 6 மணிக்கு மதுரையில் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேலூர், மதுரை (கிழக்கு), மதுரை (வடக்கு), மதுரை (மத்தியம்), சோழவந்தான் (தனி) தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

ஆண்டிப்பட்டி-திருமங்கலம்

25-ந் தேதி மாலை 4 மணிக்கு ஆண்டிப்பட்டியில் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். மாலை 6 மணிக்கு திருமங்கலத்தில் நடைபெறும் கூட்டத்தில் மதுரை (தெற்கு), மதுரை (மேற்கு), உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.