விஜயசாந்தி வீட்டில் நகை கொள்ளை!

images

பல படங்களில் ஷார்ப்பான போலீஸ் ஆபீசராக வந்து கொலை கொள்ளைகளை துப்பறிந்து கண்டுபிடித்த விஜயசாந்தி வீட்டிலேயே கொள்ளையடித்துவிட்டார்கள்.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் இருக்கும் பிரம்மாண்டமான மாளிகையில் வசித்துவருகிறார் விஜயசாந்தி.  அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அவ்வப்போது டூர் கிளம்பிவிடுவார்.

அப்படி கடந்தவாரம் சென்று திரும்பியவர் அதிர்ந்துபோய்விட்டார். வீட்டில் பீரோவில் வைத்திருந்த வைர மோதிரம் மற்றும் தங்க நகைகள் எல்லாம் கொள்ளை போயிருந்தன.

மதிப்பு சிலகோடி இருக்கும் என்கிறார்கள். பதறிப்போன விஜயசாந்தி, தனது தம்பி மூலமாக காவல்துறையில் புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டார்கள். நகைகள் மீட்கப்பட்படன.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், விஜயசாந்தி மிகவும் நம்பிய அவரது வீட்டுப்பணிப்பெண்தான் கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தவராம்.

இப்போது அவரும் சிறையில்!