விஜய்க்கு வேற வேலை இல்லையா…?  கலாய்த்த கவுண்டமணி!

 

 

vijay

 

 

க நடிகர்களையே ரசிகர்களாக கொண்டிருக்கும் பெருமை சிலருக்குத்தான் கிடைக்கும். அப்படிஒருத்தர் கவுண்டமணி . இவரை ரசிக்காத நடிகர்களே இருக்க முடியாது. சிவகார்த்திகேயனும் அப்படித்தான். இதை வெளிப்படையாகவே பலமுறை சொல்லியிருக்கிறார்.

கவுண்டமணி ஹீரோவாக நடித்த 49 ஓ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படித்தான்.   “உலகத்திலேயே எந்த நாற்காலியிலேயும் பயமில்லாம உட்கார்ந்துடலாம். ஆனால் கவுண்டருக்கு  பக்கத்து நாற்காலியில உட்கார்றது ஆபத்தான விசயம்.   இப்போ மேடையில பேசிட்டு போன  அத்தனை பேரையும் கலாய்ச்சு கதிகலங்க வச்சுட்டாரு.  அவர் கலாய்க்காத ஒரே ஒருத்தர் தேனிசை செல்லப்பாதான்” என்று பயந்த தொனியில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் கவுண்டரை பார்க்கப் போனப்போ, அவர் வச்சுருந்த ரிங் டோர்ன் மியூசிக் கேட்டு  ஷாக் ஆயிட்டேன். பாஸ்ட் அண் பியூரியஸ் படத்துல வர்ற பாட்டைதான் ரிங் டோனா வச்சிருக்கார்.  “நான் தமிழ் படமெல்லாம் பார்க்கறதில்லப்பா”ன்னு அசால்லட்டா சொன்னாரு. இங்கிலீஷ் படங்கள்தான் பாப்பாராம்” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.

விழாவுக்கு சரியான நேரத்தில் கவுண்டமணி வந்துவிட்டார். ஆனால் விழா துவங்க தாமதமாக, பத்திரிகையாளர்களுடன் அன் அபிசியலாக (!) பேசினார்.

gounder

 

அப்போது ஒரு பத்திரிகையாளர், “ரொம்ப நாளா ரிலீஸ் ஆக முடியாம இருந்த இந்த 49 ஓ படத்தை வெளியிடவும் விஜய்தான் உதவினாராமே” என்று கேட்டுவைக்க.. பட்டென்று பாய்ந்துவந்தது கவுண்டமணி பஞ்ச்:

“ ஏன்… என் படத்தை ரிலீஸ் பண்ணலேன்னா அவருக்கு தூக்கம் வராதாமா?”

தொடர்ந்து கவுண்டமணி, “விஜய்க்கு வேற வேலை இல்லையா… அவரு பாட்டுக்கு  தன்னோட படத்துல கவனம் செலுத்தி நடிச்சிக்கிட்டிருக்காரு..   என் படத்துக்கும் அவருக்கும்  என்ன சம்பந்தம்? எதுக்கு அவரு என் படத்துக்கு ஹெல்ப் பண்ணணும்? சொல்லு சொல்லு…” என்று பத்திரிகையாளர்களை உலுக்க… நல்ல வேளையாக விழா துவங்கி அவரை மேடைக்கு அழைத்துவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.