விஜய் நாயகியின் இரண்டாம் காதல்

Amy-Jackson-Latest-Stills-From-Shankars-I-Movie-3

தராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன், தற்போது நம்பர் ஒன் இடத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறார். தற்போது விஜய்59, தங்கமகன் மற்றும் எந்திரன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தொடர்ந்து புதுப்புது வாய்ப்புகளும் வந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் அம்மணி ஒப்புக்கொள்வதில்லை. அவரது கவனம் இப்போது இந்தி படங்களின் பக்கம் திரும்பிவிட்டது.

அகில இந்திய அளவில் புகழ், கூடுதல் சம்பளம்.. இதெல்லாம் காரணம் அல்ல… காதல்தான் காரணம்.

ஆம்.. சூரஜ் பஞ்சோலியை தீவிரமாக காதலிக்கிறார் எமி. சமீபத்தில் அக்சய்குமாருடன் தான் இணைந்து நடித்த சிங் இஸ் பிலிங் படத்தைப் பார்க்க சூரஜூடன் கைகோர்த்து வந்தார்.

அதுமட்டுமல்ல.. தற்போது சூரஜின் வீட்டிற்கு பக்கத்திலேயே குடி வந்துவிட்டாராம் எமி ஜாக்சன். இதை அவரே சொல்கிறார்.

சூரஜ் பஞ்சோலி, எமி ஜாக்சன் இரண்டு பேரும் ஏற்கெனவே காதலில் தோற்றவர்கள். சூரஜின் காதலி பாலிவுட் நடிகை ஜியா கானின் மர்ம மரணத்தில் சூரஜ் குற்றம் சாட்டப்பட்டார். ஆகவே சூரஜை தீவிரமாய் விசாரித்தது மும்மை காவல்துறை.   பிறகு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது பெயிலில்தான் வெளியே இருக்கிறார் சூரஜ்.

இதே போல எமியும் நடித்தபோது பாலிவுட் நடிகரும், மாடலுமான பிரதீக் ஜெயினை காதலித்தார். இருவரும் பரஸ்பரம் தங்களது கைகளில் மற்றவரின் பெயரை பச்சை குத்திக் கொண்டார்கள். ஆனால் இந்த காதலும் முறிந்தது.

ஆகவே சூரஜ் எமியின் இரண்டாம் அத்தியாயம் சிறக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published.

You may have missed