Hyderabad rain May 29 (8)_0_2

சென்னை: சென்னையில் இதுவரை 1140 மி.மீ மழை பெய்து மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 500 மி.மீ மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றும் பள்ளி விடுமுறை விடப்பட்டதோடு, நாளையும் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை நகரத்தில் கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகவே வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம், குழல், குளத்தூர், மாதவரம், ராஜமங்கலம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.

மாதவரம் பால்பண்ணை அருகே தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பணை மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை வெட்டி எடுத்த பின்னர் போக்குவரத்து சீரானது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

ஏற்கெனவே மழையால் பாதிக்கப்பட்டு, சாப்பாடு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்ட சென்னை வாசிகள் அச்சத்துடன் மழையை எதிர்கொண்டு இருக்கிறார்கள்