“விடுதலை சிறுத்தைகள்” ரவிக்குமாரை சாதியைச் சொல்லி ஏசிய தமிழ் தேசியர்

aa

 

“விடுதலை சிறுத்தைகள்” கட்சி பிரமுகர் ரவிக்குமாரை, சாதியைச் சொல்லி, ஈழத்தமிழ் தேசியர் இரா துரைரத்தினம் ஏசியது சமூகவலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும இரா. துரைரத்தினத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

யாழ் பல்கலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உடைக்கட்டுப்பாட்டை தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் செய்தார்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.    

இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட்ட இரா. துரைரத்தினம் (ராமசாமி துரைரத்தினம்) என்பவர், இதை எதிர்த்து பின்னூட்டம் இட்டார். அதோடு, ரவிக்குமாரை சாதியைச் சொல்லி இழிவாக எழுதியிருக்கிறார்.

 

துரை ரத்தினம் - ரவிக்குமார்
துரை ரத்தினம் – ரவிக்குமார்

தற்போது சுவிட்சர்லாந்தில் வாழும்  இரா. துரைரத்தினம் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இலங்கையின் கிழக்கு பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது,  கொக்கடிச்சோலை பகுதியில் இருந்து தினக்கதிர் பத்திரிகையை அச்சு ஊடகமாக வெளியிட்டு வந்தார்.  விடுதலைப்புலிகளின் கிழக்கு பகுதி தளபதி கருணா, இயக்கத்தை விட்டு வெளியேறிய பிறகு அந்த இதழ் நிறுத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆதரவாளராக இரா. துரை ரத்தினம் செயல்பட்டார். பிறகு சுவிட்சர்லாந்து சென்றவர் அங்கிருந்து “தினக்கதிர்” இணைய இதழை நடத்தி வருகிறார்.

ஊடகவியலாளர், தமிழ்த்தேசியர் என்று அறியப்படும்  இரா. துரைரத்தினம்  சாதியைச் சொல்லி ஏசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும், ராமசாமி துரைரத்தினத்துக்கு கண்டணம் தெரிவித்து வருகிறார்கள்.

இப்போது தனது முகநூல் பக்கத்தை முடக்கிவிட்டு, பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறார் இரா. துரைரத்தினம்.

1 thought on ““விடுதலை சிறுத்தைகள்” ரவிக்குமாரை சாதியைச் சொல்லி ஏசிய தமிழ் தேசியர்

  1. முதலாவது துரைரெட்னம் மட்டக்களப்பை சேர்ந்தவர் அல்ல.அவர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்தவர்.அங்குள்ள பருத்தித்துறை என்னும் பகுதியில் காணப்படும் செம்பியன்பற்று கிராமத்தை சேர்ந்தவர். இவர் மட்டக்களப்பு சொறிகல்முனை என்னும் பகுதியில் வாழ்ந்துவந்தார்.அதன்காரணமாக புலிகள் இயக்கத்தில் கேணல் கருணா மட்டகளப்பு-அம்பாறை விசேட தளபதியாக இருந்த காலங்களில் அவரின் விசுவாசியாக ,ஆதரவாளராக செயல்பட்டார்.ஆனால் புலிகள் பிரிந்ததிலிருந்து கருணாவுக்கு எதிராக புலிகளின் சார்பாகவே இவர் செயல்பட்டு வருகின்றார்.

    தமிழ் தேசிய தீவிரவாத போக்கு கொண்ட இவரை தமிழ் தேசியத்துக்கு எதிரான அணியினருடன் இணைத்து விடுவதன் ஊடாக தமிழ் தேசிய வாதிகள் தங்களின் சாதிய ஆதிக்கத்தை மறைத்துவிட முனைகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.