விமர்சனம்: திறமையான ஜர்னலிஸ்ட்டாக இருப்பது வேறு, படம் எடுப்பது வேறு: ஞாநி

 bb

பத்திரிகையாளர்  இரா. சரவணன் இயக்கிய முதல் படமான “கத்துக்குட்டி” பற்றி, பத்திரிகையாளர் ஞாநி செய்த விமர்சன பதிவு:

“பத்திரிகையாளர் இரா சரவணனின் முதல் படம் கத்துக் குட்டி.

மீதேன் எடுப்பதால் விவசாயிகள் அழிவு , ஊழல் அரசியல் என்று சரியான விஷயங்களை எடுத்துக் கொண்டால் மட்டும் நல்ல படம் எடுக்கப் போதாது. நல்ல தெளிவான பாத்திரப்படைப்புகள் வேண்டும். நம்பகமான நிகழ்ச்சிகள் வேண்டும்.

படத்தின் ஹீரோ பெரும்பகுதி நேரம் மது குடிப்பதைத்தவிர வேறு எதுவும் செய்வதில்லை. அவனை விவசாயிகளின் காவலனாக ஆக்குவது அசட்டுத்தனமாக இருக்கிறது. தொழில்நுட்பம், இசை நடிப்பு, திரைக்கதை எல்லாம் பலவீனமாக உள்ளன.

திறமையான ஜர்னலிஸ்ட்டாக இருப்பது வேறு. படம் எடுப்பது வேறு. ஒவ்வொன்றையும் தனித்தனியே கற்கவேண்டும்.”

 

Leave a Reply

Your email address will not be published.