விம்பிள்டன் டென்னிஸ்: இஸ்னரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் கெவின் ஆண்டர்சன்

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்,
தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் (Kevin Anderson), அமெரிக்கர் ஜான் இஸ்னரை (John Isner) வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக கெவின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

7 – 6, 6 – 7, 6 – 7, 6 – 4, 26 – 24 செட் கணக்கில் இஸ்டனரை வீழ்த்தி அடுத்தச்சுற்றுக்கு கெவின் ஆண்டர்சன் தகுதி பெற்றார். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

முந்தைய காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரை வீழ்த்தி கெவின் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு  ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovich) ஸ்பெயினின் ரஃபாயல் நடால் (Rafael Nadal) மோதினர்.

6 – 4, 3 – 6, 7 – 6 என்ற செட்டில் விளையாடி வந்தனர். இந்த ஆட்டத்தில் ஜோக்கோவிச் முன்னிலை வகித்த நிலையில், ஆட்ட நேரம் முடிந்ததால்,  அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இன்று அவர்கள் மீண்டும்  மோதுவார்கள்.