விரல் கேட்காத துரோணர் பாலுமகேந்திரா!:  நெகிழ்கிறார்   “ஏலைவன்”  பாரதி!

Untitled-2

ஒன்றாக  கல்லூரியில் படித்த அவன் – அவள்.  இருபத்திநான்கு வருடம் கழித்து எதிர்பாரத விதமாக சந்திக்கிறார்கள்.. ஒரு பெருமழைநாள் நாளில்!  அதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் கோர்வைதான் படம்!” – புதுமுக இயக்குநர் கே.பாரதியின் வார்த்தைகள் கவிதை போல் பொழிகின்றன.

“பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் சேர்ந்து இந்த படத்தை உருவாக்குகிறோம்.  அவருடன் இணைந்து பணியாற்றிய அர்ச்சனா, ரேவதி, நாசர்  உட்பட பலர் நடிக்கிறார்கள்.  பிரகாஷ்ராஜூக்கு முக்கிய வேடம்.

7c26410f-b2c3-475e-92fd-b12559adc027

இந்த படத்தை பாலுமகேந்திரா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். படத்தின் பெயர், அழியாத கோலங்கள்” என்று பாலுமகேந்திராவை  வார்த்தைக்கு வார்த்தை நினைவுகூறும் பாரதி, பாலுவிடம் பணியாற்றியவர் அல்ல.

“ஆனாலும்   ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் இருபது  வருடங்கள் அவரோடு நட்பைத் தொடர்ந்தவன். பாலுமகேந்திராவின் படங்களை ரசித்தவன், அதிலிருந்து பலவற்றை கற்றவன்” என்று நெகிழ்கிறார் இந்த ஏகலைவன்.

“நான் ஏகலைவன்தான்.. ஆனால் பாலு மகேந்திரா  விரல் கேட்காத துரோணர். ஆசை ஆசையாய் அவர் எத்தனை பேருக்கு சினிமா பாடம் எடுத்திருப்பார். அப்படிப்பட்டவருக்கு மாணவர்களாகிய எங்களது  படைப்பாஞ்சலி இது!”  உணர்வுபூர்வமாக சொல்கிறார் பாரதி. 

முந்தைய அழியாத கோலங்கள் போலவே, இந்த புது அழியாத கோலங்களும் அழியா புகழ் பெறட்டும்!

  • சுந்தா

 

Leave a Reply

Your email address will not be published.