விரைவில் அறிவியல் புனைவு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ள கார்த்திக் நரேன்….!

மாஃபியா’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன்.

‘D43’ என்று அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

“எப்போது கார்த்திக் நரேன் தமிழில் ஒரு அறிவியல் புனைவுப் படத்தை எடுப்பார்?” என்ற கேள்விக்கு, “ஒரு வெப் சீரிஸ் – மிக விரைவில்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கார்த்திக் நரேன் விரைவில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.