வில்லிவாக்கம்-அம்பத்தூர் இடையே மின்சார ரெயில் சேவை மாற்றம்

rain1

சென்னை:

வில்லிவாக்கம்-அம்பத்தூர் இடையே ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு ஆவடிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்(வ.எண்:43027), ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 11.15 மணிக்கு ஆவடிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்(43615), ரத்து செய்யப்படுகிறது.

ஆவடியில் இருந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் மற்றும் காலை 4.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் (43002/43602), ரத்து செய்யப்படுகிறது. நாளை அதிகாலை 2.55 மணிக்கு ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்(43891), 35 நிமிட நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

இதேபோல், பட்டாபிராமில் இருந்து நாளை காலை 3.20 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்(43102), 35 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.