விவசாயி மின் கட்டணம் ரூ. 80 லட்சம் கோடி..

விவசாயி மின் கட்டணம் ரூ. 80 லட்சம் கோடி..

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்கராலி மாவட்டத்தில் உள்ள பியாங் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அண்மையில் மின்சார கட்டணம் வந்துள்ளது.

அச்சடிக்கப்பட்ட மின் கட்டண புல்லில் இருந்த 80 என்ற எண் மட்டும் அவரது அறிவுக்குப் புரிந்தது.அதன் பின் அச்சிடப்பட்டிருந்த ஏகப்பட்ட பூஜ்யங்களை எண்ணுவதற்கு  அவருக்கு அறிவு போதவில்லை.

மெத்தப் படித்தவர்களிடம் பில்லை காட்டியபோது, ‘’80 லட்சம் கோடி’’ ரூபாய் பில் வந்துள்ளது, என்றார்கள்.

தலை கிறுகிறுத்துப் போன விவசாயி, உடனடியாக மின்சார அலுவலகத்துக்கு ஓடினார்.

பில்லை காட்டி விவரம் சொன்னார்.

‘’சின்ன தப்பு நடந்து போச்சு’ என்று அசடு வழிந்த அதிகாரிகள், மாற்று பில் கொடுத்துள்ளனர்.

அவருக்கு முதலில் வந்த பில்லை , போட்டோ எடுத்த நெட்டிசன்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர்.

அந்த பில் மாநிலம் முழுக்க , கொரோனா வைரசை விட வேகமாகப் பரவி, மின் வாரியத்தின் பெயரை ‘டேமேஜ்’’ ஆக்கியுள்ளது.