வி.சி. வேட்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் 17,18ல் வெளியீடு: திருமாவளவன்

3

சென்னை: ஏப்ரல் 17, 18ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “ மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் 17, 18ம் தேதிகளில் வெளியிடப்படும். ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்க இருக்கிறேன்” என்று கூறினார்.
\