14600005

 

“அம்மா” வாட்ஸ் அப்பில் பேசியதும் போதும், அதைவைத்து ஏகப்பட்ட காமெடி ஆடியோக்கள் உலா வர ஆரம்பித்துவிட்டன. கவுண்டமனை கலாய்ப்பது போல ஒரு ஆடியோ உலவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வீட்டம்மா ஆடியோ வந்து கலகலக்க வைக்கிறது.

“இன்னைக்கு மதியம் முட்டை வைக்காம காய்கறி வச்சாங்க, என்னன்னு கேட்டதுக்கு, வீட்டுக்காரம்மா வாட்ஸ்அப் பாணியில இப்பிடி சொல்றாங்க” என்ற முன்னுரையுடன் துவங்குகிறது இந்த ஆடியோ. கேட்டு சிரியுங்கள்:

“வணக்கம் நான் உங்கள் அன்பு மனைவி பேசுகிறேன்.

இன்று சாப்பாட்டிற்கு முட்டைக்கு பதில் காய்கறி வைத்ததானால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம்.. இது உங்கள் வீடு.

எதையும் எதிர்கொண்டு சமைக்கும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன் . விரைவில் இப் பெருந்துன்பத்தில் இருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியை அடையச் செய்வேன். இது உறுதி.

போர்க்கால அடிப்படையில் கடைக்கு சென்று முட்டை வாங்கி இரவு உணவுக்கு தருவேன். உங்களுக்கு வரும் துன்பங்கள் மற்றும் உங்கள் பையன் ஸ்கூல் பேக்கையும் நானே சுமப்பேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது .எனக்கு எல்லாமே நீங்கள்தான். என் பெற்றோர் வைத்த பெயரே மறந்து போகும் அளவுக்கு நீங்கள் அழைக்கும் ஏ, இந்தா, அடியே என்ற சொற்களுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து சமைத்து கொண்டிருக்கிறேன். நன்றி.”

இது எப்படி இருக்கு?