simple-house-tips

 

 

1.ஃப்ரிஜ்ஜில் உள்ள ஃப்ரீசரில், ஐஸ்கட்டிகள் தோன்றாமலிருக்க கல் உப்பை உட்பகுதியில் தடவவும்.

2.நன்கு பாலீஷ் செய்யப்பட்ட மரச் சாமான் களில் கறை படிந்துள்ளதா?

அரை லிட்டர் சுடுநீரில், இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து, நல்ல சுத்தமான துணியை இதில் நனைத்து கறை உள்ள இடத்தை துடைக்கவும். ஆயில் அல்லது கிரீஸ் கறை உள்ள இடத்தில் இவ்வாறு சுத்தம் செய்தால் கறை எங்கே? என்று நீங்களே தேடுவீர்கள்.

3.கதவு கிரீச் கிரீச் என சத்தமிடுகிறதா? கரித்துண்டை,அல்லது ஆயில் சத்தம் வரும் இடத்தில் தேய்க்கவும்.

4.செடிகள் மனதிற்கு அமைதியைத் தருவதோடு, சுற்றுச்சூழலுக்கு அழகை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் நீங்கள் தூக்கி எறியும் சில பொருட்களை, செடிகளுக்கு உரமாக போடலாம்.

5.உங்கள் வீட்டில் டீ போடும் போது டீ இலைகள் அல்லது டீத்தூளை குப்பையில் போடாமல், நீங்கள் வளர்க்கும் செடிகளின் தொட்டிகளில் போட்டால், செடிக்கு அது நல்ல உரமாக இருக்கும்.

6.அக்குவாகார்ட் உள்ள வீடுகளில், அதனை சுத்தப்படுத்திய பின் அதிலுள்ள கரியை தூக்கிப்போடாமல் செடிக்கு போடுங்கள். செடியின் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும்.

7.பாட்டில்களை மலர்கள் வைத்து அழகுபடுத்தலாம். அறையின் ஓரத்தில் 3அல்லது4 பாட்டில்களை ஒன்றாக வைத்து, அதில் மலர்களை வையுங்கள், வீட்டிற்கு வருபவர்கள் ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப் பார்ப்பார்கள்.