வெப்பக்காற்று எச்சரிக்கை: தலைவர்கள் மற்றும் தேர்தல் ஆணையம் கவனிக்க.. 

b

பொதுவாக மழை, புயல் நேரத்தில்தான் பாதுகாப்பாக இருங்கள் என்று வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். ஆனால், தற்போது வெப்பக் கொடுமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“அடுத்த இரு நாட்களில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை வெப்பக் காற்று தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த நேரத்தில் 40 டிகிரிக்குமேல் வெப்பநிலை உயரும் எனவே பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெயிலில் நடமாடவேண்டாம்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் மீதான அபிமானத்தாலோ, பணத்துக்காகவோ பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்லும் அப்பாவி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜெ. கூட்டத்தில் மயங்கிய மக்கள்
ஜெ. கூட்டத்தில் மயங்கிய மக்கள்

இந்தியத் தேர்தல் ஆணையமும் இதை கவனத்தில் கொண்டு,   அரசியல் கட்சிகள் நண்பகல் நேரத்தில் பிரச்சாரம் செய்வதையும் மாநாடுகள் கூட்டுவதையும் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவின் விருத்தாச கூட்டத்தில் நடந்தது போன்ற உயிர்ப்பலிகள் இனியேனும் நடக்காமல் தடுக்க வேண்டும்.

 

 

You may have missed