வெளிநாட்டுக்கு 10 ஆயிரம் கோடியா: மோடியை விளாசும் சி.பி.எம். எம்பி.!

மாலத்தீவு நாட்டிற்கு ரூ.10000 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பதற்கு நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கேரளாவைச் சேர்ந்த சி.பி.எம். கட்சியின் எம்.பியான ராஜேஷ், “சமீபத்தில் கடும் புயல் மழையால் கேரளாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது கேரளா கோரிய நிதியை மத்திய மோடி அரசு அளிக்கவில்லை. மிக்ககுறைவான தொகையையே அளித்தது. இப்போது மாலத்தீவுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்திருக்கிறார் மோடி. இதில் மூன்றில் ஒரு பங்கை கேரளாவுக்கு அளித்தாலும் பயனுள்ளதாக இருக்குமே” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே போல சமூகவலைதளமான ட்விட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

“மாலத்தீவு  நாட்டின் மொத்த மக்கள் தொகையே 4 லட்சத்து முப்பதாயிரம் பேர்தான். தற்போது பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி அறிவித்திருக்கிறார் மோடி. ஆக, அங்கு தலைக்கு 2 லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் ஆகிறது. இந்த அளவுக்கு உதவி செய்வது தேவையா” என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இன்னொருவர், “தாங்கள் தேர்தலில் வென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் தலைக்கு ரூ. 15 லட்சம் தருவதாக பாஜக கூறியது. ஆனால் இப்போது அதைவிட குறைவாகத்தான் மாலத்தீவுக்கு அளித்திருக்கிறார்கள். அதுவரை நன்றி” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

“இதுமட்டுமல்ல. சமீபத்தில் இலங்கைக்க மிகக்குறைந்த விலையில் பல்லாயிரம் லிட்டர் பெட்ரோல் அளித்தார் மோடி. ஆக இந்தியர்களுக்குத்தான் எந்த நன்மையும் செய்யமாட்டார் போலும் மோடி” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.