வைகோவை ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை

tamilisai1_2097893f

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’கூட்டணிக்காக பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன். கூட்டணியில் உள்ள கட்சியை மிக மோசமாக சித்தரிக்க வைகோவால்தான் முடியும். விஜயகாந்த் எவ்வளவு நம்பிக்கை வைத்து உங்களுடன் சேர்ந்துள்ளார். அதை நீங்கள் கொச்சைப்படுவதாக உள்ளது.

செய்தியாளர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வைகோ வெளிநடப்பு செய்கிறார். செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்’’என்று தெரிவித்தார்.