ஷங்கரின் 2.O: 5 நாளில் ரூ.400 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கோ புரடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் கதை வசனம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து, கடந்த 29ந்தேதி வெளியாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் 2.O படம் சூப்பர் டூபர் ஹிட்டாகி உள்ளது.

இந்த படம் இதுவரை ரூ.400 கோடி பணம் ஈட்டி வசூலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான லைக்காவே அறிவித்து உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகர் அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்பட பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான 2.0 படம் கடந்த வெள்ளிக்கிழமை (29-11-18) அன்று வெளியாக சக்கை போடு போட்டு வருகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இந்த படம்,   வெளியாகி 5 நாட்களே ஆன நிலையில், வசூலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பெருத்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 3டி படமான 2.0 பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்த்த நிலையில், வெளியான அன்று படத்தை பார்த்தவர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை பதிவிட்டிருந்தாலும், படத்தின் பிரமாண்டம் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமம் ரூ. 120 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட தாக கூறப்பட்டது. அதுபோல டிஜிட்டல் உரிமம்,  மாற்ற மாநில உரிமைகள் என ரூ.250 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், படம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் ஷங்கர் ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் படம் 3டி அமைப்பில் உலக தரம் வாய்ந்த படத்தை   எடுத்திருப்பது உலக திரைப்பட தயாரிப்பாளர்களி டையே வியப்பை எற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் படத்தின் 5 நாள் வசூல் மட்டும் ரூ.400 கோடி என்று தயாரிப்பு நிறுவனமான லைக்கா தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே படம் விநியோகம் சம்பந்தமாக 350 கோடிக்கு மேல் வசூலான நிலையில், தற்போது 5 நாளில் ரூ.400 கோடி வசூல் செய்திருப்பது இந்திய சினிமா வரலாற்றில் சாதனை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து டிவிட் செய்துள்ள லைக்கா நிறுவனம், 2.0 படம மெகா பிளாக் பஸ்டர் என்று குறிப்பிட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: History in the making! 400 CRORES WORLDWIDE! Not just a blockbuster, it's a MEGA BLOCKBUSTER!, ஷங்கரின் 2.O: 5 நாளில் ரூ.400 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
-=-