ஸ்டாலினை முன்னிறுத்தும் சு.சாமி! பின்னணி மர்மம்! : நியூஸ்பாண்ட்

newsbond

யம் பிஸி.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்திகலை அனுப்புகிறேன்” – சொல்லிவிட்டு லைனை கட் செய்துவிட்டார் நியூஸ்பாண்ட்.

அவ்வப்போது அவர் அனுப்பிய செய்திகளின் தொகுப்பு:

download

“சசிகலா, டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது கடந்த 1996-ம் வருடம் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு அன்னிய செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தது.  ஜெ.ஜெ.டி.விக்கு செயற்கைகோள் இணைப்பு பெற்ற சமயத்திலும்  இன்னும் சில பண பரிவர்த்தனைகளின் போதும் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி,  சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனுவை ஏற்றுக்கொண்டு, அவர்கள் இருவரையும் வழக்கில் இருந்து விடுத்தார் நீதிபதி.

இதை எதிர்த்து  அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. . இந்த வழக்கு நீதிபதி நாகப்பன் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தான்  இந்த வழக்கில் இருந்து விலகுவதாக கூறி விலகிவிட்டார். ஏற்கனவே நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் பானுமதி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள். இப்போது சிலர், இந்த விவகாரம் குறித்து பிரச்சினைய கிளப்ப தயாராகிறார்கள்.

download (1)

 

 “பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி வரும்” என்று  சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க.வின் தமிழக அரசை தள்ளி வைக்கவே மத்திய பாஜக அரசு நினைக்கிறது என்கிறார்கள்.   “தமிழக அரசின் திறமையின்மை மற்றும் அலட்சிய நடவடிக்கைதான், சமீபத்திய சென்னை வெள்ளத்துக்குக் காரணம் என்று மத்திய அரசின் நிபுணர் குழு அறிவித்துள்ளது, இதற்கு ஒரு உதாரணம் என்கிறார்கள்.

12631431_498470817004922_8081488696070418391_n

தவிர, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  ட்விட்டியிருக்கிறார்.

இதை,2ஜி வழக்கோடு முடிச்சுப்போட்டு பேசுகிறார்கள். அதாவது,  2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில்  சி.பி.ஐ. தரப்பின் இறுதிவாதம் நிறைவடைந்துவிட்டது. , குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவங்களோட இறுதி வாதத்துக்குப் பிறகு, விரைவில்தீர்ப்பு வெளியாகும் என்கிற நிலை.

‘இதே விவகாரத்தில்   கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் கைமாறியது தொடர்பான வழக்கில், அமலாக்கப் பிரிவின் இறுதிவாதம்  முடிந்துவிட்டது. கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் இறுதி வாதம் மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், “கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோரிடம்  கூடுதலாக வாக்குமூலம் வாங்க, அமலாக்கப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பும் மே மாதத்திற்குள்.. அதாவது சட்டமன்றத் தேர்தலுக்குள் வந்துவிடும் என்கிறார்கள்.

Stalin_is_my_su7513

இதெல்லாம் தி.மு.க.வுக்கு ஆபத்தான சங்கதிகள். இந்த நிலையில்தான், தி.மு.க., தே.மு.தி.க, ப.ஜ.க. என்று ரூட் போடுகிறார் சு.சாமி. ஆக, வில்லங்க சு.சாமி, வழக்குகளில் இருந்து நிவாரணம் கிடைக்கச் செய்வதாக  தி.மு.க. தரப்புக்கு உத்திரவாதம் கொடுத்திருப்பாரோ என்ற யூகம் அடிபடுகிறது.

அதோடு, கருணாநிதியை ஒதுங்கச் சொல்லி, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சு.சாமி சொல்கிறார். இப்படி ஓர் ஐடியா, தளபதி தரப்பில் இருந்தே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று  அதிர்ச்சி செய்தி சொல்கிறார்கள் சிலர்.

 

download

பிரதமர் பேசிய கோவை கூட்டத்தில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. வெற்று நாற்காலிகளே நிறைந்திருந்தன. “பாதுகாப்பை காரணம் காட்டி, போலீசார் செய்த கெடுபிடிதான் கூட்டம் இல்லாமல் போனதற்குக் காரணம்” என்று பாஜகவினரே புலம்பினார்கள்.

ஆனால் இரு செய்தி தொலைக்காட்சிகள் கூட்டம் இருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையே திரும்பத்திரும்ப காட்டின. அதில் ஒரு தொலைக்காட்சி அதிபர், பா.ஜ.க கூட்டணியில் இருப்பவர். ஆக, அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்னொரு தொலைக்காட்சியில் ஏன் அப்படி செய்தார்கள் என்று பலருக்கும் ஆச்சரியம்.

இதற்குக் காரணம், அந்த தொலைக்காட்சி அதிபர் அல்ல. அங்கு முக்கிய பொறுப்பில் இருப்பவர்தானாம். “இப்படி வெளிப்படையாக கட்சி சார்போடு நடந்துகொள்கிறீர்களே..  பதவிக்கு ஆபத்து வந்துவிடாதா” என்று அவரது நலம் விரும்பிகள் கேட்டதற்கு, “மத்தியிலேயே பதவி தர தயாரா இருக்காங்க..  இதென்ன பதவி” என்று சிரிக்கிறாராம்.

 

download (2)

 

மின்சார விவகாரத்தில் தமிழக அரசு மீது பலவித குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் குற்றச்சாட்டுக்களைப் பொருட்படுத்தாமல், மறுபடி அதிக விலைக்கு மின்சாரம் வாங்க, தனியாரிடம் பேசியிருக்கிறார்களாம். “ஆட்சி முடிவதற்கும், மக்களுக்கு நன்மை(!) செய்வதற்காக” இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.

2 thoughts on “ஸ்டாலினை முன்னிறுத்தும் சு.சாமி! பின்னணி மர்மம்! : நியூஸ்பாண்ட்

Leave a Reply

Your email address will not be published.