ஸ்டாலினை விமர்சிக்க டிடிவிக்கு தகுதி உண்டா? கனிமொழி சாடல்

சென்னை:

ருவரை விமர்சிக்க வேண்டும் என்றால் அதற்குகூட தகுதி வேண்டும்…  திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க டிடிவிக்கு தகுதி இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக சாடினார்.

சமீபகாலமாக டிடிவி தினகரன் திமுக மீது கடுமையாக சாடி வருகிறார். ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என்று விமர்சித்த டிடிவி,  திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம் பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி! என்றும் டிவிட்டரில் பதிவிட்டிருந் தார்.

டிடிவியின் இதுபோன்ற பதிவுகள் திமுகவினரிடையே கடும் கோபத்தை கிளப்பி உள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம், டிடிவி தினகரன் ஸ்டாலினை விமர்சித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எம்.பி. கனிமொழி,  “டிடிவி தினகரன் யார்? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றால் கூட ஒரு தகுதி வேண்டும். அதேபோல யாரை விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற ஒரு தகுதியும் உள்ளது. மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் அளவுக்கு டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை என கடுமையாக சாடினார்.

முன்னதாக மாநிலங்களவையில் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா விவாதத்தின் போது திமுக எம்.பி.கனிமொழி பேசும்போது, திமுக இந்த மசோதாவை கடுமை யாக எதிர்க்கிறது…  நான் கடுமையாக எதிர்க் கிறேன்… ஏனென்றால்,  நான் பெரியார் மண்ணை சேர்ந்தவள், பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்றவர்,  பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கருணை அடிப்படையில் அல்ல, அது அவர்களின் உரிமை. நாட்டில் பொருளாதார ரீதியில் நிகழும் புறக்கணிப்புகளை விட, சாதிய ரீதியிலான புறக்கணிப்புகள் அதிகமாக உள்ளன. என்றார்.

மேலும், நம் நாட்டில் உள்ள ஒரு சாபக்கேடு, சாதியை புறம்தள்ள ஒருவர் மதத்தினை மாற்றிக்கொண்டாலும் அவரை விடாமல் சாதி அடையாளம் பின்தொடரும் என்பது தான்” என பேசி அரங்கை அதிர வைத்தார்.

கார்ட்டூன் கேலரி