ஹரியானாவில் முன்னாள் ராணுவத்தினர் 1,000 பேருக்கு போலீஸ் வேலை…..அரசு அறிவிப்பு

சண்டிகர்:

ஹரியானா மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆயிரம் பேர் காவல் துறை அதிகாரிகளாக நியமனம் செய்யப்படவுள்ளனனர்.

அம்மாநில கூர்கான் போலீஸ் சரக பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆயிரம் பேரை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டதில் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர பணிகளுக்கு மட்டுமே இவர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.

ராணுவ ஒழுங்கு நடவடிக்கை, உடற்தகுதி இல்லாமை போன்றவற்றால் பணி நீக்கம் செய்யப்படாத 25 முதல் 50 வயது வரையிலான முன்னாள் ராணுவ வீரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.