ஹாரிபாட்டர் நடிகர் மறைவு

alan_rickman

ஹாரிபாட்டர் படத்தில் ஸ்னேப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற  ஆலன் ரிக்மேன் காலமானார்.  புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு வயது  69.

லண்டனில் பிறந்த ஆலன் ரிக்மேன்  ஆரம்ப காலத்தில் நாடக நடிகராக விளங்கினார்.  பிறது திரைத்துரைக்கு வந்த இவர், பெரும்பாலான படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார்.  வசீகரம் நிறைந்த இவரது குரல் ரசிகர்களை ஈர்த்தது.

“’ட்ரூலி மேட்லி டீப்லி” என்ற படத்தில் நல்லவராக வந்த இவரது நடிப்பும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஹாரி பாட்டர் படத்தில் ஸ்னேப் ஆக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இவரின் மறைவிற்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹாரிபாட்டல் நாவலை எழுதிய ஜே.கே. ரவ்லிங்க, “ஆலன் ரிக்மேன் மறைவு, பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. , அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதரும்கூட”  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.