ஹாலிவுட் படத்தில் தனுஷ்

dhanush-uma-thurman_640x480_81453704438

“The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard” என்ற பிரெஞ்ச் நாவல், திரைப்படமாக உருவாகிறது இந்த படத்தில் தனுஷ் ஹாலிவுட் உலகிற்கு அறிமுகமாக உள்ளார்.  பிரபல ஹாலிவுட் நடிகை உமா த்ருமன் மற்றும் அலெக்ஸாண்டிரா டட்டரியோவுடன் நடிக்கிறார். இரான் மற்றும் பிரெஞ்ச் படங்களை இயக்கி வரும் மழ்ஜான் சத்ராபி இந்தபடத்தை இயக்குகிறார்.

ஒரு ரகசிய திட்டத்துக்காக தன் தாயாரால் இந்தியாவில் இருந்து பாரீஸுக்கு அனுப்பப்படும் மாயாஜாலக்காரர் வேடத்தில்   தனுஷ் நடிக்கிறார்.  நகைச்சுவையான, கருணை உள்ளம் மிகுந்த கேரக்டராம் தனுஷுக்கு.

“இந்த ஹாலிவுட் படத்தில் நடிப்பது புது அனுபவமாக இருக்கும். அதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்கிறார் தனுஷ்.

இந்த படத்தின் இயக்குநர் மழ்ஜான் சத்ராபி  “தனுஷ் நடித்த படங்களைப் பார்த்தபோது, அவரது அறிவுத்திறமை புலப்பட்டது. அதோடு அவரது வசீகர சிரிப்பும் கவர்ந்தது.  எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதனுடன் ஒன்றி நடிக்கும் திறமையையும் ரசித்தேன். அதனால்தான் எனது படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினேன்” என்கிறார்.

வாழ்த்துகள் தனுஷ்!

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: சினி பிட்ஸ் Hollywood film Dhanush தனுஷ் ஹாலிவுட்
-=-