ஹாலிவுட் பட தயாரிப்பாளர் தற்கொலை.. 27வது மாடியிலிருந்து குதித்தார்..

ஹாலிவுட் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோனின் படமான கெட் கார்ட்டர் மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் இசை ஆவணப்படம் ஷைன் எ லைட் போன்ற திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து பல கோடிகள் பைனான்ஸ் செய்தவர் ஸ்டீவ் பிங். டாம் ஹாங்க்ஸ் படங்களுக்கும் இவர் முதலீடு செய்துள்ளார். 55 வயதாகும் ஸ்டீவ் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.


லாஸ் ஏஞ்சல்ஸின் சென்சுரி சிட்டியின் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 27 வது மாடிக்கு நேற்று சென்ற ஸ்டீவ் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின் டனின் நெருங்கிய நண்பர் ஆவார். பிங்கிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிறக்கும்போதே பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டீவ். 18 வயதில், பிங் தனது தாத்தா லியோ எஸ் பிங்கிடமி ருந்து சுமார் 600 மில்லியன் சொத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் பணக்காரரான ஸ்டீவ்வின் மன அழுத்தத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
#Hollywood producer Steve Bing Suicide in Los Angeles city
#Actress Liz Hurley, #Los Angeles’ Century City,
Sylvester Stallone
#ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஸ்டிவ் பிங்
#பில் கிளிண்டன்