ஹீரோயினுக்கு சமைத்துப்போடும் ஹீரோவின் அப்பா!

zzzzzzzzzzz

காமடி + கேரக்டர் ரோல்களில் “டெல்லி” வரை பெயரெடுத்தவர் அந்த மூத்த நடிகர். அவரது மகனுக்கும் நடிப்பாசை வரவே, சொந்த தயாரிப்பில் இறங்கிவிட்டார்.

அதெல்லாம் தப்பில்லை…. ரொம்ம்பப சிக்கனமாம். பிலிம் இல்லாத கேமரா வந்து நாளாச்சு… இவரோ “கேமராவே இல்லாம படம் எடுக்க முடியாதா” என்று கேட்கிற லெவலில் இருக்கிறாராம்.

உச்சகட்ட மேட்டர் இதுதான். ஹீரோயினும் அவர் அம்மாவும் தங்க, ஓட்டில் ரூம் போட்டால் செலவாகும் என்று, தன் வீட்டு மாடி அறையிலேயே தங்கச் சொல்லிவிட்டாராம்.

இவர், வீட்டில் அசைவம் சாப்பிடமாட்டார் என்பதால், அவர்களுக்கு சமைக்க ஒரு ஆளையும் போட்டாராம். சமைக்க வந்த அம்மாள், உப்பு, புளி, மசாலா எல்லாம் அதிகமாக பயன்படுத்துகிறார் என்பதை வாசத்தை வைத்தே கண்டுபிடித்தவர், தற்போதுதானே சமையலில் இறங்கிவிட்டாராம்!

“சிக்கனம் தேவைதான்.. அதுக்குன்னு கோமணத்தை எடுத்து முண்டாசு கட்டலாமா” என்று கெக்கலித்துச் சிரிக்கிறது கோடம்பாக்கம்.

Leave a Reply

Your email address will not be published.