மக்களின் மகிழ்ச்சிக்காக ஒரு மந்திரியை நியமித்த ஒரு அரசு, எந்த நாட்டில் என்று படியுங்கள்

king-minister

என்ன அமைச்சரே, நாட்டில் மாதம் மும்மாரியும் மழை பெய்கிறதா? மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகயிருக்கிறார்களா? இப்படியெல்லாம் நாம் கதையில தான் படிச்சுருக்கோம்; இதுவே உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்?

United Arab Emiratesல் அதை நடைமுறைப்படுத்த ஒரு அமைச்சரை நியமித்துள்ளது அரசு. Ohood அல் Roumi என்பவரை பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தோம், நாட்டின் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்த நியமித்துள்ளார். மகிழ்ச்சியைப் பெருக்க திட்டங்கள் பல தீட்டவேண்டியது தான் அவர் பொறுப்பு.

1972 ஆம் ஆண்டில், பூட்டான் நாட்டில் மொத்த தேசிய மகிழ்ச்சி நிலை மதிப்பிடு கணக்கிடப்பட்டது, சமீப காலத்தில், தாய்லாந்து மற்றும் ஐக்கிய ராஜ்யம் பல மகிழ்ச்சி திட்டங்கள் முயற்சித்தனர்.

மேலும் பல நாடுகள் இதை ஒரு எடுத்துகாட்டாக எடுத்து பின்பற்றும் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.