cc
 
வாஷிங்டன்:
மெரிக்காவில் முறைகேடாக தங்கியுள்ள   3 லட்சம் இந்தியர்கள் உடப்ட பல நாடுகளைச் சேர்ந்த  1.11 கோடி பேர் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அல்லது அமெரிக்காவின் தென் பெகுதியில் பெரும் சுவர் எழுப்பி, அதற்கு  மறுபுறம் அவர்கள் அனுப்பப்படுவார்கள்” என்று பேசி அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச நாடுகளுக்கு எதிராக இவர் கூறி வரும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையையும், அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இந்தியர்களை குறி வைத்து இவர் அடிக்கடி வில்லங்கமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். “அமெரிக்காவின் வேலை வாய்ப்புகள் இந்தியாவுக்கு சென்றுவிட்டது.  அதை மீட்டு கொண்டு வருவேன்” என்று ஏற்கெனவே பேசினார்.
இப்போது,  “போதிய ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள 3 லட்சம் இந்தியர்கள் உட்பட, பல நாடுகளைச் சேர்ந்த, 1.11 கோடி பேரை, அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவேன்.  அவர்கள் இங்கு திரும்ப வர விரும்பினால் முறையாக வரலாம்” என்றார்.
இது இயல்பான பேச்சுத்தான். ஆனால் அதற்கு அடுத்து அவர் சொன்னதுதான் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது:
“முறைகேடாக வசிப்பவர்களை நாமாக வெளியேற்றுவதை விட, அவர்களே முனவந்து சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றால் நல்லது. இல்லை என்றால் அமெரிக்காவின் தென் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு, சட்ட விரோதமாக வசிப்பவர்கள், அந்த சுவரின் மறுபுறத்துக்கு அனுப்பப்படுவர்”  என்று  பேசி அதிர்ச்சி அளித்துள்ளார்.
“டிரம்ப்  இனவாதத்துடன் பேசிவருகிறார். அவரது கிறுக்குத்தனமான பேச்சினால் அமெரிக்காவின் மரியாதை சர்வவதேச அளவில் குறைந்து போகிறது” என்ற விமர்சனம் அமெரிக்காவில் எழுந்துள்ளது.