சின்னையா
சின்னையா

தமிழக கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆளும் அ.தி.மு.கவிலோ, களையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான்  அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின்  ஆதரவாளர்களது கட்சி பதவிகளை பறித்தார் அக் கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
இன்று கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையாவின் அமைச்சர் பதவியையும், கட்சிப்பதவியையும் அதிரடியாக பறித்திருக்கிறார்.  . இதுவரை. ஜெயலலிதா அமைச்சரவையில் 25முறைக்கு மேல் மாற்றம் செய்திருக்கிறார்.
அந்த புத்தகம்
அந்த புத்தகம்

தாம்பரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னையா,  2011-ம் ஆண்டு முதல் இடம் பெற்றிருந்தார். இவர் வசம் இருந்த கால்நடைத்துறை வளர்மதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல சின்னயா வகித்து வந்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சிட்லபாக்கம் ராஜேந்திரம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 
தனக்கென்று ஒரு கோஷ்டியை ஏற்படுத்திக்கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தார், அவர் மீது  ஊழல் புகார்கள்கள் குவிந்தன என்றெல்லாம் சின்னயாவின் நீக்கத்துக்கு, பலவித காரணங்கள்  கூறப்படுகின்றன.
மக்கள் செய்தி மையம் என்ற இணைய இதழை நடத்தி வரும்  பத்திரிகையாளர் அன்பழகன், வெளியிட்ட “சின்னையா + கரிகாலன் – கூட்டுக்கொள்ளை, ஊழல்”  என்ற புத்தகமே பதவி பறிப்புக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த புத்தகத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் என்று காசோலை மற்றும் சில பதிவேடுகளுடன் வெளியானது.
கடந்த பிப்ரவரி 9ம் தேதி இன்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதன் பிறகு,  பிப்ரவரி 29ம் தேதி அன்று,  தாம்பரம் நகராட்சி கவுன்சில்  கூடியது. அப்போது,  இந்த புத்தகத்தை  வைத்து, திமுக கவுன்சிலர்கள் பிரச்சனை எழுப்பினார்கள்.. இதையடுத்து கவுன்சில் கூட்டத்தில் கலவர நிலை ஏற்பட்டது.
புத்தகத்தை வைத்து நடந்த ஆர்ப்பாட்டம்
புத்தகத்தை வைத்து நடந்த ஆர்ப்பாட்டம்

இது குறித்து விசயமறிந்த வட்டாரங்கள் கூறுவதாவது:
“கவுன்சில் கூட்டத்தில் “ஊழல் புத்தகத்தால்” கவலவரம் ஏற்பட்டதை அடுத்து,  தாம்பரம் நகராட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து உளவுத்துறையிடம் மேலிடம் ரிப்போர்ட் கேட்டது. சின்னையாவும் கரிகாலனும் சேர்ந்து ஊழல் புரிந்ததை ஆதாரத்துடன் ரிப்போர்ட் செய்தது உளவுத்துறை.
தனது கவனத்துக்கு வராமல் பெரும் ஊழல் நடந்திருப்பதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா கடும் கோபம் கொண்டார். இதையடுத்தே சின்னையாவின் அமைச்சர் மற்றும் கட்சி பதவிகளை பறித்துவிட்டார். 
அதே போல தாம்பரம். நகராட்சித்தலைவர் கரிகாலன்,  வகித்து வந்த தாம்பரம் நகர செலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்” என்கிறார்கள். 
மேலும் கட்சி நீக்கங்கள்: 
அமைச்சர் விஜயபாஸ்கர் வகித்துவந்த, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.    காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து திருபோரூர் எம்.எல்.ஏ மனோகரன் நீக்கப்பட்டுள்ளார்.