FotorCreated2
 
டெல்லி-  தமிழக முதல்வர் ‘அம்மா’ ஸ்டைலில் மலிவு விலை உணவகங்களையும் அனைத்து வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்படும் என  டெல்லி  முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது பட்ஜெட்டை மார்ச் 28 இல் சமர்ப்பித்த்து.  டெல்லி மாநில துணை முதலமைச்சர்மனீஷ் சிஸோடியா ரூ. 46,600 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்,  டெல்லி முழுவதும்  ரூ.10 கோடி செலவில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படு என்று தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்துள்ள ‘அம்மா உணவகங்களை’ முன்மாதிரியாகக் கொண்டு  டெல்லியிலும் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும். இங்கு விற்கப்படும் உணவுப்பணடங்களின் விலை ரூ.5 முதல் 10 வரை இருக்கும்.  இதனால் வெளிமாநிலங்களிலிருந்து வந்து டெல்லியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சத்தான உணவு கிடைக்கும் நோக்கத்தில் இது அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் டெல்லியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும். இதற்காகரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது அமைக்கப்படுவதாக துணை முதலமைச்சர்  சிஸோடியா தெரிவித்தார்.