புனே

காராஷ்டிரா அரசு  குறைந்த பட்ச விலை நிர்ணயிக்காததால் கொண்டைக் கடலை விவசாயிகளுக்கு சுமார் ரூ 6170 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொண்டைக்கடலை நன்கு விளைச்சல் ஆகி உள்ளது.   விவசாயிகள் சங்கம் கொண்டைக்கடலைக்கு குறைந்த பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.4400 என நிர்ணயிக்குமாறு அரசிடம் வெகு நாட்களாக வேண்டுகோள் விடுத்திருந்தது.   இது குறித்து அரசுக்கு பலமுறை இந்த சங்கம் நினைவூட்டியும் வந்துள்ளது.

ஆனால் அரசு குறைந்த பட்ச விலையை நிர்ணயிக்கவில்லை.   தற்போது மொத்தம் சுமார் 1100 லட்சம் குவிண்டால் கொண்டைக் கடலை விளைச்சல் ஆகி உள்ளது.   இதில் அரசு சுமார் 424.4 லட்சம் குவிண்டால் கடலையை கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.   விவசாயிகள் மீதமுள்ள விளைச்சலை வெளிச் சந்தையில் விற்றாக வேண்டும்.    வெளிச்சந்தையில் விற்கவேண்டியது சுமார் 685.6 லட்சம் குவிண்டால் உள்ளது.

தற்போது குறைந்த  பட்ச விலையை அரசு நிர்ணயம் செய்யாததால் விவசாயிகள் தங்களிடம் விளைந்துள்ள கொண்டைக் கடலையை குறைந்த விலைக்கே விற்கப் படவேண்டும் என்னும் நிலை உண்டாகி உள்ளது.  இதனால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6150 கோடி வரை இழப்பு ஏற்படும் என மகாராஷ்டிரா விவசாயிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.