ண்டிகர்

ரியானா மாநிலத்தில் அரசு நிலம் திருடப்படலாம் என எச்சரித்த அரசு அதிகாரி அசோக் கேம்கா பாஜக அரசால் ஆறாம் முறையாக இடமாற்றம் செய்யப்பட்டார்

அரியானா மாநில பாஜக அரசு சமீபத்தில் நில ஒருங்கிணைப்பு திட்டம் ஒன்றை அறிவித்தது.   இந்த திட்டத்தின்படி ஃபரிதாபாத் நகரின் மிக அருகில் உள்ள கோட் என்னும் சிற்றூரில் 3184 ஏக்கர் நிலம் சாகுபடிக்கு ஏற்றது அல்ல என அறிவிக்கப்பட்டது.   இந்த நிலங்கள் மலை அடிவாரத்தில் உள்ளதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அரியானா மாநில அரசின் ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கேம்கா, “இந்த நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் கிழ் வரும் நிலங்கள் ஆரவல்லி பகுதியில் உள்ள மலை அடிவார்த்தில் உள்ளதால அந்த நிலங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.   எனவே இந்த பொதுச் சொத்துக்களை தனியார் அபகரிக்க மிகவும் வாய்ப்புள்ளது.

இதனால் இந்த பகுதியின் சுற்றுச் சூழல் கடுமையாக  பாதிப்பு அடையும்.   அத்துடன் இந்த நில ஒருங்கிணைப்பு என்பது விவசாயத்தை வளர்ப்பதற்கு பதில் நிலத் திருடர்களுக்கு உதவி வருகிறது.   கடந்த சில வருடங்களாக நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் வந்துள்ள நிலங்களின் தற்போதைய நிலைமை குறித்து விசாரணை செய்தால் உண்மை வெளி வரும்” என தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இந்த கருத்தை தெரிவித்த அசோக் கேம்கா இன்று பாஜக அரசால் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   இதற்கான காரணம் ஏதும் அரசால் தெரிவிக்கப்படவில்லை.    கடந்த 1991 ஆம் வருடம் ஐஏஎஸ் முடித்த இவர் பாஜக ஆட்சி செய்யும் 4 வருடங்களில் இவ்வாறு ஆறு முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   இவருக்கு இது அவரது 27 வருட அனுபவத்தில் 52 ஆம் இடமாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.