mallya-759
 
டெல்லி-
பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை மரியாதையுடன் திருப்பிச் செலுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விஜய் மல்லையாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:‍
நான் தனிப்பட்ட வழக்குகள் குறித்து நான் எந்தக் கருத்துக்களும் கூறவிரும்பவில்லை. ஆனால் அதேவேளை விஜய் மல்லையா போன்ற பெரிய நிறுவன அதிபர்கள் வங்கிக் கடன்களை மரியாதையுடன் திருப்பிச் செலுத்துவது அவர்களின் கடமையாகும். ரூ.9000 கோடிக்கு மேல் வங்கிககளில்  கடனாகப் பெற்றுள்ள தொகையை  விஜய் மல்லையா குழும நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாதபோது பிணையாக வைக்கப்பட்டுள்ள  அவருடைய சொத்துக்களைக் கைப்பற்றி கடன்களை சட்டப்படி  மீட்கமுடியும். இல்லையேல் வங்கிகளும், புலன்விசாரணை அமைப்புகளும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இது தொடர்பான விசாரனையில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
வாராக் கடன்களை வசூலிக்கும் பணிகள் தற்போது விரைவில் தொடங்கும் என்று கருதுகிறேன். சில தொழில்துறைகள் கடும் நெருக்கடியிலும் துயரத்திலும் உள்ளன. வாராக் கடன்கள இரன்டு வ‌கைப்படும். ஒன்று பொருளாதாராச் சூழல். மற்றொன்று குறிப்பிட்ட சில தொழில் துறைகளில் ஏற்படும் இழப்பு. தற்போது  அத்துறைகளுக்கான‌ தீர்வு காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். என்றார்.
விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.விஜய மல்லையா விவகாரத்தில், “சாத்தியமாகக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என ஏற்கெனவே நாடாளுமன்றத்திலேயே அருண் ஜேட்லி உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அதை உறுதிப்படுத்தும் வகையில் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்ததிருப்பது குறிப்பிடத்தக்கது.