pazha karuppaiya 600 2று நடராஜ் அரசை விமர்சித்ததற்கு ஐ.பி.எஸ். நடராஜ் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். அந்தக் கட்சி கலாச்சாரத்துக்கு ஏற்ப, அமைதி காத்து, மீண்டும் கட்சியில் இணைந்துவிட்டார்.

ஆனால், அ.தி.மு.க. துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ. கருப்பையா, அதிரடியாக அரசை விமர்சித்து வருகிறார். சமீபத்தில், “நாப்பது சதவிகிதம் கமிசன் வாங்குகிறார்கள்” என்று பேசி அதிரவைத்தார்.

இன்று, தினமணியில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையிலும் கடுமையான சில விமர்சனத்தை வைத்திருக்கிறார்.  “இவரு அதிமுகவுலதான் இருக்காரா..” என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு காரமாக இருக்கிறது அந்த கட்டுரை.

அதிலும் சில பகுதிகள் பச்சை மிளகாய்..

“தலைவனின் அறிவுதான் கட்சியின் முழு அறிவு! தலைவனின் குறைகள்தாம் கட்சியின் குறைகள் என்று ஆகுமானால், தலைவனின் வீழ்ச்சி கட்சியின் வீழ்ச்சி என்று முடிந்து போய்விடாதா? ” என்றும், ” நம்முடைய கட்சிப் பொதுக் குழுக்களிலெல்லாம் ஏகமனதாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அப்புறம் அந்தக் கட்சிகளில் வளர்ச்சி எப்படி இருக்க முடியும்?” என்றும் எழுதியிருக்கிறார்.

இவை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போகவில்லையா.. அல்லது இவருக்குப் பதிலா வேறு கருப்பையாவை சைலண்டா நீக்கிட்டாங்களா?