வாட்ஸ்அப்:
தவியேற்பு விழாவின் போது கட்-அவுட், பேனர் என எதுவும் வைக்கக்கூடாது என்று உத்தரவு.
வாழ்த்துகள்.
ஆனால் கோவை பகுதியிலிருந்து சுமார் 2,000 பேர் பதவியேற்பு விழாவிற்காக சென்னை வரவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தாம்பரம், பல்லாவரம், பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தனியார் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த ஹோட்டல்களுக்கான செலவிற்காக அந்தப் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் போலி பில்கள் போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

download (1)

இப்படி ஒரு செய்தி பரவலாக பரவி வருகிறது. இதில் உண்மை இருப்பதாக சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் நண்பரொருவர் கூறுகிறார்.
திமுகவினரைப் போல “ஹோட்டலில் தங்குவோம். ஆனால் காசே கொடுக்க மாட்டோம்” என்று தனியார் ஹோட்டல்காரர்களின் தலையில் மிளகாய் அரைக்கவில்லை தான்.
ஆனால் இந்த போலி பில் விவகாரம் ரொம்பக் கொடுமை. இதையே சாக்காக வைத்து எல்லாவற்றுக்கும் அப்படியே செய்ய ஆரம்பித்து விடுவார்கள் அதிகாரிகள்.
அதற்கு அனுமதிக்கக் கூடாது. ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
மேற்படி சம்பவம் உண்மை எனில் கடும் கண்டனங்கள்.