டில்லி

ளில்லா மிகச் சிறிய வேவு விமானங்களை இயக்க அனுமதி வழங்கும் மசோதா தயாராகி வருவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆளில்லா வேவு விமானங்களுக்கு தடை உள்ளது.   ஆயினும் அரசு மற்றும் சில பாதுகாப்பு நிறுவனங்கள் இவற்றை தனி அனுமதியுடன் உபயோகப்படுத்து வருகின்றன.   தற்போது இதை இயக்க ரிமோட் விமானிகளுக்கு அனுமதி அளிப்பதற்கான விதிமுறைகளின் மசோதா தயாராகி வருகிறது.

இது குறித்து சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குனர் தெரிவிக்கையில், “ சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 7 கிலோ மற்றும் 25 கிலோ எடையுள்ள வேவு விமானங்களை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.    ஆனால் நமது நாட்டில் இந்த விதிமுறைகள் மேலும் கடுமையாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.