1
 
லண்டன்: இந்திய வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடி கடனை அடைக்காமல் ஏமாற்றி, தலைமறைவாக வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட மோசடி  தொழிலதிபர் விஜய் மல்லையா , கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
அவருக்கு சொந்தமான யுனைடெட் புரூவரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் சுமார்  ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதையடுத்து லண்டனுக்கு தப்பி ஓடிய  விஜய் மல்லையா அங்கேயே இருக்கிறார்.  இந்த நிலையில் கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை அவர் விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்திய பண மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே இதற்காக செலவழித்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.   அந்த அணியின் மதிப்பு சுமார் 130 கோடி ரூபாய் ‌உள்ள நிலையில், தன்னையும் பங்குதாரராக இணைத்துக் கொள்ள மற்ற உ‌ரிமையாளர்கள் சம்மதித்தாக அவர் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கரீபியன் பீரிமியர் லீக்கில் ஒரு அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.