மும்பை:

கட்டுமானம் தவிர , அனைத்துத் துறைகளிலும் கடந்த 14 ஆண்டுகளாக புதிய முதலீடுகள் குறைந்துவி்ட்டன.

கடந்த 2004-ம் ஆண்டு மத்தியிலிருந்து புதிய திட்ட அறிவிப்புகள் குறைந்துவிட்டன. தடையற்ற திட்டங்கள் அருகே இருக்கும் நிலையில், புதிய திட்ட அறிவிப்புகள் வெறும் காகித அளவிலேயே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஐ) திட்டத்தின் புள்ளி விவரத்தின்படி, டிசம்பர் காலாண்டில் 1 டிரில்லியன் ருபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களை இந்திய நிறுவனங்கள் அறிவித்தன. செப்டம்பர் காலாண்டில் அறிவிக்கப்பட்டதைவிட 53 சதவீதம் குறைவு..கடந்த ஆண்டைவிட 55 சதவீதம் குறைவு. தனியார் துறை வழியேயான புதிய அறிவிப்புகள் வீழ்ச்சிக்கு வழி வகுத்தன.

செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் காலாண்டில் புதிய தனியார் துறை திட்டங்கள் 62 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. மற்றும் புதிய பொதுத் துறைத் திட்டங்கள் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துவிட்டன. பொதுத் துறைகளில் புது முதலீட்டு அறிவிப்புகள் 37 சதவீதம் வீழ்ச்சியைடந்தன. ஆண்டுக்கு 41 சதவீதம் என 50 ஆயிரத்து 604 கோடியாக குறைந்தது. 2004 டிசம்பரிலிருந்து குறைவான நிலை.

புதிய முதலீடுகளில் சரிவு இருந்ததால், அனைத்து முக்கிய துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதில் ஒரே விதிவிலக்கு கட்டுமானத் துறையாகும். இதுவும் ஆரம்பத்தில் குறைந்த அளவே இருந்தது. டிசம்பர் காலாண்டில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கண்டது குறிப்பிடத்தக்கது.