டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 33,743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 95,33,471 ஆகி உள்ளது.  நேற்று 497 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,38,657 ஆகி உள்ளது.  நேற்று 38,301 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,70,104 ஆகி உள்ளது.  தற்போது 4,22,477 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,350 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,32,176 ஆகி உள்ளது  நேற்று 111 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,357 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,796 பேர் குணமடைந்து மொத்தம் 16,95,208  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 88,537 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,440 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,667 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,808 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,159 பேர் குணமடைந்து மொத்தம் 8,51,690 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 663 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,69,412 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,003 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,159 பேர் குணமடைந்து மொத்தம் 8,55,485 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,428 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,84,747 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,733 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,398 பேர் குணமடைந்து மொத்தம் 7,62,015 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,999 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,316 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,14,674 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,299 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,924 பேர் குணமடைந்து மொத்தம் 5,50,788 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,462 பேர் சிகிச்சையில் உள்ளனர்.