டில்லி

த்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும்  செல்வந்தர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் வருமான வரிக் கணக்கு அளித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   குறிப்பாக ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 97689 ஐ எட்டி உள்ளது.  அதாவது சுமார் 20% அதிகரித்துள்ளது.  வருமான வரிக் கணக்கு அளித்தோர் விவரங்கள் குறித்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ள விவரங்களின் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்

இந்த வருடம் 5.87 கோடிக்கு மேல் வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் 5.52 கோடி தனிப்பட்டவர்கள், 11.3 லட்சம் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள், 12.69 சிறு நிறுவனங்கள் மற்றும் 8.41 லட்சம் பெரிய நிறுவனங்கள் அடங்கும்

சுமார் 1.7 லட்சம் பேர் தங்களுக்கு வருமானம் ஏதும் இல்லை எனக் கணக்கு அளித்துள்ளனர்.

ஊதியம் பெறுபவர்களில் சுமார் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் ஊதியம் ரூ.5.5 லட்சத்தில் இருந்து ரூ.9.5 லட்சம் வரை உள்ளது.  மொத்தத்தில் சராசரி ஊதியம் ரூ.7.12 லட்சமாக உள்ளது.

இந்த கணக்குப்படி 89793 பேருக்கு ரூ.1 கோடி முதல் ரூ. 5 கோடி வரை வருமானம் உள்ளது.  அடுத்தபடியாக 5132 பேருக்கு ரூ.5-10 கோடி வரை வருமானம் உள்ளது.  ரூ.10-25 கோடிவரை 2000க்கும் குறைவானவர்களின் வருமானம் உள்ளது.

மிகப் பெரிய செல்வந்தர்கள் எனப்படும் ரூ.500 கோடிக்கு அதிகமான வருமானம் ஈட்டுவோர் இந்தியாவில் 3 பேர் மட்டுமே உள்ளனர்.  இந்த அறிக்கையில் அவர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை.