England
டெல்லி:
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளரும், இந்திய அணியின் முன்னாள் மேலாளருமான சுனில்தேவ், சமீபத்தில் ஒரு இந்தி நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில், ‘‘2014ம் ஆண்டு மான்செஸ்டரில் இந்தியா&இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், கேப்டன் டோனி டாஸ் வென்று வானம் மேக மூட்டத்துடன் இருந்த போதும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால், முன்னதாக நடந்த அணி கூட்டத்தில் முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் அந்த ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் நடந்திருப்பது உறுதியானது. இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு இன்னிங்ஸ் தோல்வியை இந்தியா சந்தித்தது. மூன்று நாளில் இந்த போட்டி முடிந்துவிட்டது.
இந்த விபரம் குறித்து அப்போதை பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் கூறினேன். இதை பாராட்டிய சீனிவாசன், ஆனால் விஷயம் வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டார். தற்போது வரை இந்த விஷயம் குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவலை கொள்ளவில்லை’’ என தெரிவித்துள்ளார்.
போட்டி முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் மீது முன்னாள் மேலாளர் குற்றம்சாட்டியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.