பீஜிங்

ந்தியாவை சேர்ந்த ஆன்மிக இயக்கங்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் இந்திய ஆன்மிக இயக்கங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தைவானை சேர்ந்த நடிகை அன்னி யீ என்பவர் இந்த இயக்கங்களுக்கு மிகவும் ஆதரவு அளித்து வருகிறார். அவர் தனது இணைய தள பதிவில் தென் இந்தியாவில் சித்தூரில் உள்ள ஒரு ஆன்மிக இயக்கத்தை புகழ்ந்து பதிவிட்டிருந்தார். அதற்கு வரவேற்பு மட்டுமின்றி அதற்கு சமமாக எதிர்ப்பும் கிளம்பியது.

அன்னி யீ

சீன செய்தி ஊடகமான குளோபல் டைம்ஸ், “தாய்வான் தீவை சேர்ந்த நடிகை அன்னி யீ கடந்த திங்கள் அன்று சமூக வலை தளமன சினா வைபோவில் தென் இந்தியாவில் உள்ள சித்தூரை சேர்ந்த அம்மா மற்றும் பகவான் ஆகியோரின் இயக்கங்களை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இது மிகவும் ஆட்சேபத்துக்குறியது.” என பதிந்திருந்தது.  அதை ஒட்டி நடிகைக்கு எதிராக பல கருத்துக்கள் வரவே அவர் தனது பதிவை நீக்கி விட்டார்.

சீன அரசின் பொது பாதுகாப்பு நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சீன மக்கள் இந்திய ஆன்மீக இயக்கத்திடம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த இயக்கங்களில் பல பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக சிங் (ராம்ரகிம் சிங்) என்பவர் நடத்திய ஆன்மிக அமைப்பில் 200 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவர் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி தென் கொரியாவை சேர்ந்த புத்தமதம் மற்றும் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களும் பல பொருளாதார மோசடியிலும் பாலியல் குற்றங்களிலும் தண்டனை பெற்றுள்ளனர். இந்த ஆன்மிக வாதிகளில் பலர் சீனாவில் மக்களை தூண்டிய குற்றத்ஹ்டுக்காக தண்டனை பெற்றுள்ளனர்.

எனவே இது போன்ற ஆன்மிக தீவிரவாதிகள் குறித்து அரசுக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் எனவும் அவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் அரசு எச்சரிக்கை விடுக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.