handcuffed
 
ஐதராபாத்:
அமெரிக்காவில், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர முயன்ற இந்திய மாணவ மாணவியரை அமெரிக்க காவல்துறை கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்தியது அம்பலமாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில், நமது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்துவருகிறார்கள். வருடா வருடம் இந்த்த தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த ஆண்டும் அதே போல பலர் அமெரிக்க பல்கலையில் சேர அந் நாட்டுக்குச் சென்றார்கள். அவர்களில் சிலர், சில அமெரிக்க பல்கலைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அவற்றை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருக்கிறது அமெரிக்க அரசு. இது தெரியாமல் அந்த பல்கலையில் சேர ஆந்திர மாணவர்கள் பலர் அமெரிக்கா சென்றுவிட்டார்கள்.
அவர்களை, திரும்ப இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது அமெரிக்க அரசு. அப்படி கடந்த வாரம் திருப்பி அனுப்பப்பட்ட ஆந்திரமாணவி, “
கூறியதாவது: “கலிபோர்னியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, முறையான ஆவணங்களுடன், கடந்த டிச., 30ல், அமெரிக்கா சென்றோம். எங்களை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் திருடர்களை போல் நடத்தினர். விமானத்தில் இருந்து இறங்கிய எங்களுக்கு வலுக்கட்டாயமாக கைவிலங்கிட்டு, ஒரு அறையில் அடைத்தனர்.
ஒன்பது மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். மரியாதையின்றி நடந்துகொண்டனர்.
பிறகு, நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டோம். விசயம் தெரியாமல், கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக் கழகத்தில், சேர்ந்தது மட்டும்தான் நாங்கள் செய்த குற்றம்: என்று அந்த மாணவி கண்ணீர் மல்க கூறினார்.
இதே போல மேலும் பல மாணவ மாணவிகள், கண்ணீருடன் தங்கள் சோகத்தைக் கூறினார்கள்.
உலகம் முழுவதும் மனித உரிமையை காக்க முயல்வதாக கூறும் அமெரிக்கா, மாணவர்களுக்கு கைவிலங்கிட்டு அறையில் அடைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.