ந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ன. இது ரிக்டர் அளவு கோலில் 6.5-ஆக பதிவாகி உள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர்.

பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தாகவும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 2 பேர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் சேத விவரம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலுக்கடியில் சுமார் 91-கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.