national-anthem96-730x400
கொழும்பு:
ரவிருக்கும்  இலங்கை சுதந்திர தினத்திலிருந்து, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழிலும்,தேசிய கீதம்  பாடப்படும்  அந்நாட்டு  அரசு  அறிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய கீதம்,  சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் என்பது வழக்கமாக இருந்தது. தற்போதைய அதிபர் மைத்ரி ஸ்ரீசேன பொறுப்பேற்றவுடன், “தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்” என்று உறுதி அளித்தார்.  இதற்கு தீவிர சிங்களவாதிகள் மற்றும் புத்த பிக்கு அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் அந்த எதிர்ப்புகளையும் மீறி,  வரும்  பிப்ரவரி 4ம் தேதி சுதந்திர தினத்திலிருந்து, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழிலும்,தேசிய கீதம்  பாடப்படும் என்று அந்நாட்டு  அரசு  அறிவித்துள்ளது.
rajitha sena
இலங்கை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இலங்கையில் சிங்கள மொழிக்கும், சிங்கள பெளத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும், தமிழ் மக்களுக்கும் உண்டு.
தமிழ் பேசும் மக்களின் மொழியை மதித்து அவர்களின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
இதை உறுதிப்படுத்தும் வகையில், அரசு நிகழ்ச்சிகளிலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விழாக்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும்.  இலங்கை சுதந்திரமான பிப்ரவரி நான்காம் தேதியில் இருந்து  இது கடைபிடிக்கப்படும்.
இதையும் சிலர் எதிர்க்கக் கூடும். ஆனால் அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை,” ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.