லக்னோ:

வரும் மக்களவைத் தேர்தலில் மோடி மந்திரம் பலிக்காது. பாஜக வெற்றி பெறுவது சந்தேகம்தான் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சங்பிரிய கவுதம் தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது;
மோடி பெரிய தலைவர்தான் மறுக்கவில்லை. ஆனால் வரும் மக்களவை தேர்தலில் மோடி அலை இருக்காது. வரும் தேர்தலில் மோடி மந்திரமும் பலிக்காது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதே சந்தேகம்தான்.
இது கட்சித் தொண்டர்களுக்கும் தெரியும். இதனால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அரசின் அனைத்து கொள்கை முடிவுகளும் மக்களை கோபப்படுத்துவதாகவே உள்ளன.
திட்ட கமிஷன் பெயரை மாற்றியது, சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் தலையிடுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தராகண்ட் அரசுக்கு இடையூறு செய்வது ஆகியவை பாஜகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.
அமீத்ஷா ராஜ்யசபை எம்பியாக பணியாற்றலாம். அவர் வகிக்கும் தேசியத் தலைவர் பதவியை சிவ்ரான் சவுகானிடம் கொடுத்துவிடலாம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு துணை பிரதமர் பதவி தரவேண்டும்.
கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்த விதம் சரியானதல்ல. இப்போது மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வந்தால், பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தோல்வியடையும்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆன்மீக பணிக்கு அனுப்பிவிட்டு, உத்திரப்பிரதேச முதல்வராக ராஜ்நாத் சிங்கை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.