download (1)
 
விவேகானந்தர்  பிறந்த தினம்
சுவாமி விவேகானந்தர் 1863ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார்.  இன்றைய நாளில் அவரது பொன்மொழிகள் சிலவற்றை அறிவோம்:
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
 
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
download
 
பிரியங்கா  பிறந்தநாள்
ராஜிவ் காந்தி-சோனியா காந்திதம்பதியரின் ஒரே மகளான பிரியங்கா காந்தியின்  பிறந்தநாள் இன்று. (1972). ராபர்ட் வதேராவை மணந்ததால் பிரியங்கா வதேரா ஆனார்.
புது டில்லியில்  ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் உள்ள மாடர்ன் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பிறகு தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார்.
தனது தாயார் சோனியாகாந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அரசியல் ரீதியான உதவிகளை செய்து வருகிறார். முழு நேர… நேரடி அரசியலுக்கு வர வாய்ப்பிருந்தும் அவர் அதை விரும்பியதாக தெரியவில்லை
1999 இல் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் “நான் மனதளவில் மிகத்தெளிவாக இருக்கின்றேன். மக்களை நான் விரும்புகின்ற அளவுக்கு, அரசியல் என்னை ஈர்க்கவில்லை. அரசியலில் இல்லாமலேயே அவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளைச் செய்ய இயலும்” என்று கூறியது அவரது மனநிலையை விளக்கும்.
ஆனாலும்,   தனது தாயார் மற்றும் சகோதரரின் தொகுதிகளான ரே பரேய்லி மற்றும் அமேதி ஆகியவற்றிற்கு தொடர்ந்து சென்று  மக்களை சந்திக்கிறார்.   மக்களிடையே பிரபலமாக இருக்கிறார்.
“பிரியங்கா தனது தாயாருக்கு  சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், அரசியல் விஷயங்களில் நல்ல ஆலோசகராகவும்” செயல்படுகிறார்” என்று அரசியில் வட்டாரத்தில் பாராட்டப்படுகிறார்.
download (2)
 
அகதா கிறிஸ்டி நினைவு தினம்
பிரபல ஆங்கில துப்பறியும் எழுத்தாளர், அகதா கிறிஸ்டி   1976ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.    இவர்,  மேரி வெஸ்ட்மாகொட் என்ற பெயரில் காதல் ரசம் சொட்டும் கதைகளையும் எழுதியிருக்கிறார் என்பது பலருக்குத்தெரியாது.
neduncheli
நெடுஞ்செழியன் நினைவுதினம்
திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய இரா.நெடுஞ்செழியன் நினைவு தினம் (2000)  இன்று.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தபோதே , பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இந்த இயக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டுதிராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, ஈ. வெ. கி. சம்பத், நெடுஞ்செழியன், என். வி. நடராசன். க. மதியழகன்) ஒருவராகத் திகழ்ந்தார்.
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றவர்.
இவர் சிறந்த எழுத்தாளரும்கூட.  இவர் எழுதிய நூல்களில் சில: கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த கழகம், தீண்டாமை, திருக்குறள் தெளிவுரை, பாவேந்தர் கவிதைகள் – திறனாய்வு, நீதிக்கட்சியின் வரலாறு ஆகியவை ஆகும்.