1
சர்வதேச இனப்படுகொலை நினைவு நாள்
இரண்டாம் உலகப்போர் நடந்தபோது,  ஜெர்மனியின் நாஜிப்படை  ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் ரோமானிய ஜிப்சி இனமக்களைப் பிடித்துவந்து சித்திரவதை முகாம்களில் அடைத்து விஷவாயு மூலம் கொன்றது. . சுமார் அறுபது லட்சம் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அந்த போரின் இறுதியில் ஜெர்மனியின் நாஜிப்படைகளை ரஷ்யப்படைகள் வென்றன. 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் நாள் போலந்தின் அவுஷ்விட்ஸ் நகரில் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் ரஷ்யாவின் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர். இந்த நாளே சர்வ தேச இனப்படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
2
 
 லெனின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட நாள்
1924-ஆம்  இதே நாள்தான், சோவியத் யூனியனை நிர்மானித்தவரான  விளாடிமிர் லெனின்  உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.  ஜனவரி 21ம் தேதி அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் கெடாத வண்ணம் ரசாயன தைலங்களைக் கொண்டு பதப் படுத்தப்பட்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ஜனவரி 27ம் நாள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. துவக்கத்தில் அனைத்து மக்களும் பார்வையிட ஒரு மாத காலம் மட்டுமே லெனினின் உடலைப் பாதுகாத்திடக் கருதியிருந்தனர். அதன்பிறகு மக்கள் லெனின் மீது காட்டிய அளவற்ற மதிப்பையும் மரியாதையையும் கண்டு அதனை நிரந்தரமாக பாதுகாக்கும் முடிவை மேற்கொண்டனர். 2012ம் ஆண்டு லெனின் உடலை அடக்கம் செய்துவிடலாம் என ரஷ்ய அரசு முடிவு செய்த போதிலும் அம்முடிவை அமல் படுத்தும் துணிச்சல் இன்றி லெனின் உடல் இன்னமும் கூட மாஸ்கோவின் செஞ்சதுக்க மாளிகையில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
 
 
 
Holocaust Remembrance Day