the-flower-park

க்களிடையே சகிப்புணர்வின்மையின் காரணமாக ஏற்படும் பயங்கரமான விளைவுகளை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் குண்டு வெடிப்பில் இருந்து, இந்தியாவில் நிலவும் மத அடிப்படைவாதம் வரை மக்களுக்கு ஏராளமான துன்பங்கள்.

சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படுவதே உலக சகிப்புத்தன்மை நாள்.

பெரிதாக இன்று நாம் ஏதும் செய்ய வேண்டாம். நமக்குப் பிடிக்காதவர் என்று நாம் நினைக்கும் ஒருவரிடம், இன்று மனம் விட்டுப்பேசுவோம்.  நேரில் முடியாவிட்டால் என்ன.. அலைபேசியில் மனம் விட்டு பேசுவோம். அன்பை விதைப்போம்.

ஒவ்வொருவரிடமிருந்தும் வெளிப்படும் சிறு துளி அன்பு, பெரும் அன்பு வெள்ளமாய் மாறி, உலகை பூக்காடாக்கும்.